உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டு உள்ளது …!என்னென்ன வசதிகள் இருக்குனு தெரியுமா!!!

0

துபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று இந்த குளத்தை துபாய் நாட்டு  இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது திறந்து வைத்து உள்ளார். மேலும் இது  பல நவீன வசதிகளை கொண்ட நீச்சல் குளமாக உள்ளது.

நாத் அல் செபா பகுதியில் 196 அடி ஆழத்தில் டீப் டைவ் என்ற நிறுவனத்தால் உலகின் மிக பெரிய இந்த நீச்சல் குளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது 14 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு உள்ளது. இதன் கொள்ளளவு  ஆறு ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமமாகும். மேலும் இதில் 56 கண்காணிப்பு கேமராக்கள்,பல வண்ணங்களில் 164 மின் விளக்குகள் ஆகியவை உள்ளன. மேலும் இதில் ஒரே நேரத்தில் 100 பேர் பங்கேற்கும்  வகையிலான நிகழ்ச்சியை நடத்த முடியும்.

மேலும்,’பேர்ல்’ என பெயரிடப்பட்ட இந்த நீச்சல் குளத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி வழங்குவதற்கான முன்பதிவு இணையதளம் ஒரு சில வாரங்களில் தொடங்கப்படும். மேலும் இந்த நீச்சல் குளம்  நூலகம்,விளையாட்டு அரங்கம் என ஒரு நகரத்தை  உள்ளடக்கியது. டைவிங் செய்ய விரும்புவோரை இந்த நீச்சல் குளம் மிகுந்த அளவு ஈர்க்கும் என ‘டீப் டைவ்’ நிறுவனத்தின் இயக்குநர் ஜரோட் ஜப்லான்ஸ்கி தெரிவித்து உள்ளார். மேலும் இந்த நீச்சல் குளம் உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளம் என்ற கின்னஸ் சாதனையை பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here