பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., இந்தக் கட்டணம் செலுத்துவது கட்டாயம்! கல்வித்துறை உத்தரவு!!

0
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., இந்தக் கட்டணம் செலுத்துவது கட்டாயம்! கல்வித்துறை உத்தரவு!!
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு., இந்தக் கட்டணம் செலுத்துவது கட்டாயம்! கல்வித்துறை உத்தரவு!!

அரசு பள்ளி மாணவர்கள் தாய்மொழி வழி கல்வி பயின்று மேன்மை பெற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை முன்னேற்ற உள்கட்டமைப்பு, ஆங்கில வழி கல்வி போன்றவைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 10, 12 ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கட்டணங்களை அரசு அறிவித்துள்ளது. அதாவது 11ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் பாடத்திற்கு ரூ.50 ம், இதர கட்டணம் ரூ.35 ம் செலுத்த வேண்டும். மேலும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் செய்முறை பாடங்களுக்கு ரூ.225 யும், செய்முறை இல்லாத பாடங்களுக்கு ரூ.175 யும் தேர்வு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக்கட்டணங்களை ஜனவரி 20ம் தேதி மாலை 5 மணிக்குள் வசூல் செய்து https://dge1.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here