
நாட்டில் அரசுத்துறையில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2014 செப்டம்பர் 1ம் தேதிக்கு முன்னதாக பணிபுரிந்தவர்களுக்கு உயர் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை EPFO நிறுவனம் ஜூன் 26ஆம் தேதி வரை வரவேற்கப்பட்டது.
அதன்படி 17.49 லட்சம் விண்ணப்பங்களை வரவேற்கப்பட்டதில், 6.29 லட்சம் படிவங்களை ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 32,951 விண்ணப்பதாரர்கள் ரூ.1,974 கோடி வரை உயர் ஓய்வூதிய தொகை செலுத்த வேண்டி உள்ளதாக EPFO நிறுவனம் அறிவித்துள்ளனர்.