
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவி ஶ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த ஊர் மக்கள் பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் எரித்தனர். இதையடுத்து பள்ளி மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பின் 144 நாட்களுக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளி திறக்கப்பட்டு 9 மற்றும்10 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பும், 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் கனியாமூர் சக்தி தனியார் பள்ளிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்.., மாதம் தோறும் உதவித்தொகை பெறலாம்.., அரசு அதிரடி அறிவிப்பு!!!
அதாவது அறிக்கையில் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் மன நிலையை மாற்ற பள்ளி என்ன செய்தது என்றும், அவர்களுக்கு பழைய நினைவு வராமல் இருக்க மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம் பள்ளிகள் திறந்ததில் இருந்து எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என பதிலளித்துள்ளனர்.