தமிழகத்தில் ஆச்சிஜன் பற்றாக்குறை?? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!!

0

நாட்டில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவத்திற்காக பயன்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அரசிடம் அனுமதி கேட்காமல் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஆகிசிஜனை வழங்கி வருகிறது.

ஆக்சிஜன் பற்றாக்குறை:

நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.60 கோடியை நெருங்கி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிய பிரச்சனையாக நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆகிசிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதனை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழக அரசிடம் அனுமதி கேட்காமல் தமிழகத்தில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு அனுப்பியது. வேற்று மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பியுள்ள நிலையில் இந்த புகாரை சென்னை நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு உள்ளதா என்று தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளது.

விவேக்கிற்காக சிம்பு இறங்கி செஞ்ச காரியத்த பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு விளக்கியுள்ளது. அதன்படி தமிழகத்தில் மருத்துவ பதற்ற நிலை எதுவும் தற்போது இல்லை. தமிழகத்தில் 400 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் அரசு மருத்துவமனைகளில் 31,000 ரெம்டெசிவர் இருப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு தேவைப்படும் ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here