இதில் ஈடுபாடு உள்ளவரை தான் நான் திருமணம் செய்வேன் – ஓபன் டாக் கொடுத்த ராசி கன்னா!!

0

திரை உலகத்தில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வரும் நடிகை ராசி கன்னா தனது வருங்கால கணவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகையின் நிபந்தனை:

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக களம் இறங்கியவர் நடிகை ராசி கண்ணா.  இதனையடுத்து அடங்கமறு, சங்கத்தமிழன், அயோக்கியா, துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.  தற்போது இவர், அரண்மனை 3 மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து பதிவிட்டுள்ள இவர், முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.  அதாவது தனக்கு ஆண் நண்பர் இல்லை என்றும், இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்றும் பேசியுள்ளார். ஆனால் தனக்கு வாழ்க்கை துணையாக வரும் நபர் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here