தயார் நிலையில் 5 மைதானங்கள்.., வெற்றி பெறுவோருக்கு பரிசு ரூ. 2 கோடி.., சென்னை மண்ணில் வெற்றி யாருக்கு?

0
தயார் நிலையில் 5 மைதானங்கள்.., வெற்றி பெறுவோருக்கு பரிசு ரூ. 2 கோடி.., சென்னை மண்ணில் வெற்றி யாருக்கு?
தயார் நிலையில் 5 மைதானங்கள்.., வெற்றி பெறுவோருக்கு பரிசு ரூ. 2 கோடி.., சென்னை மண்ணில் வெற்றி யாருக்கு?

செஸ் ஒலிம்பியாட்டிற்கு அடுத்தப்படியாக சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது. இதற்காக சர்வதேச தரத்தில் 5 ஆடுகளங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னை ஓபன் டென்னிஸ்!!

முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் சர்வதேச டபிள்யுடிஏ டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஏ.டி.ஏ.டி மைதானத்தில் இன்று தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷ்யாவின் வர்வரா கிராசெவா, போலந்தின் மேக்டர் லினட், கனாடாவின் யூஜெனி புசார்ட், சீனாவின் குவாங் வாங்,சுவீடனின் ரெபக்கா பீட்டர்சன் உள்ளிட்ட பல சர்வதேச முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இவர்களை தொடர்ந்து இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மன் தண்டி உள்ளிட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். மேலும் சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடர் சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க சார்பில் நடைபெறும் இந்த போட்டிக்கு மொத்த பரிசு தொகையாக ரூ.2 கோடி அறிவித்துள்ளனர்.

இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.9 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளும் சோனி டென் 2 சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் அனைத்து மைதானத்திலே நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here