
தற்போது பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் அனைவரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்தக் கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானல், ஊட்டியில் ரோஜா கண்காட்சி, மலர்கள் கண்காட்சி, பழ கண்காட்சி போன்றவை நடத்தப்படுவது வழக்கம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை பார்க்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நீலகிரி ஊட்டியில் கோடைத் திருவிழா ஆரம்பித்துள்ளது. இந்த கோடைத் திருவிழாவில் 55 ஆயிரம் ரோஜா பூக்களை கொண்ட யானை, முயல் போன்ற விலங்குகளின் உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பலரும் கண்டு களித்து செல்பி எடுத்துச் செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அங்கு ஹெலி டூரிசம் நடைபெறுவது வழக்கம்.
உங்கள் பகுதியில் மின்தடை எப்போது?? தெரிந்துக் கொள்ள எளிய வழி இதோ!!
ஆனால் இனி ஊட்டி கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் இயக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்குக் காரணம் என்னவென்றால் ஊட்டி மலைப்பகுதி என்பதால் அங்கு பலவகை விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. ஹெலிகாப்டர் இயக்கப்படுவதால் உயிரினங்கள் இறக்கின்றன. இதனால் கோடை திருவிழாவில் ஹெலிகாப்டர் இயக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.