தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹெலிகாப்டர்: அதும் இந்த 3 மாவட்டங்களில் தானாம் – சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0

சட்டபேரவையில் இன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மதுரை, கொடைக்கானல், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில்  ஹெலிகாப்டர் சுற்றுலாவானது தொடங்கப்படும் எனவும், இதற்காக ரூபாய் 1 கோடி செலவில் இதற்கான இறங்குதளம் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் சுற்றுலா:

“மலைகளின் இளவரசி” என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றது. இங்கு அதன் அழகை ரசிக்க மக்களுக்கு பல இடங்கள் இருக்கின்றனர். இதில் முக்கியமானதாக கூறப்படுவது ‘நட்சத்திர ஏரி’ இதனை சுற்றிப்பார்க்க குதிரை, சைக்கிள் மூலம் சவாரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் சுற்றுலா தளமான ராமேஸ்வரமும் அதில் உள்ள தனுஷ்கோடிக்கும் வரும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து தான் வருகின்றது. இதனால் இந்த இடங்களின் அழகை முழுவதுமாக ரசிப்பதற்காக தற்போது சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் கொடைக்கானல், இராமேஸ்வரம் மட்டுமின்றி மதுரை போன்ற இடத்திலும் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலாவை  தொடங்க ஒரு கோடி ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here