Tuesday, August 3, 2021

வருகிறது கனமழை…!தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்த போகுதுன்னு தெரியுமா!!!

Must Read

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக  மழை பெய்து வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 7ஆம் தேதி தமிழகத்தில் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ் நாட்டில் கடந்த சில நாட்கள் முன்பு வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது அதனை தணிக்க தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதையடுத்து ஜூலை 7ஆம் தேதி ஆகிய இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்  ஆய்வு மையம் என தெரிவித்து உள்ளது.

அதாவது  திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட  7 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதால் மேலும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன், ஒரு  சில பகுதிகளில்  இடி மற்றும்  மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -