தமிழகத்தில் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் – மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம்!

0

தமிழகத்தில் தொடரும் மழையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடரும் கனமழை:

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 8ம் தேதி தான் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும். ஆனால் இந்த வருடம் உலகத்தில் உள்ள சில நாடுகளில் முன்னதாகவே ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை தொடர்ந்து இடியுடன் கூடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தீவிரம் அடைந்து உள்ளது . மேலும் மழையால் பள்ளத்தாக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற அபாயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆறுகளின் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் சில பகுதிகளில் ரெட் அலர்ட் மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆகஸ்ட் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

என்ன இப்படி பொசுபொசுனு இருக்கீங்க.., கொஞ்சமும் போல இருக்கே பூனம் பாஜ்வா! பிளாட் ஆன ரசிகர்கள்!!

அதாவது, மேட்டூர் அணையிலிருந்து 1,80,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதனால் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, உணவு , உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் மக்களின் பாதுகாப்புக்கான தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here