தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு வாகனங்களுக்கு கட்டுப்பாடு? சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .மேலும் அந்த நாளில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 9, 10, 11 ஆம் ஆகிய தேதிகளில் சென்னைக்குள் எந்த ஒரு கனரக வாகனங்களும் செல்ல கூடாது என தெரிவித்துள்ளனர்.