உடலுக்கு வழு தரும் தினை காய்கறி இட்லி – ட்ரை பண்ணி பாருங்க.., மிச்சமே வைக்க மாட்டாங்க!!

0

வரகு, சாமை, தினை, குதிரைவாலியை வைத்து சூப்பரான காய்கறி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வரகு, சாமை, தினை, குதிரைவாலி – 1 கப்

பயத்தம் பருப்பு – 1 கப்

உளுந்தம் பருப்பு – 1/2 கப்

இஞ்சி – சிறிது

பச்சை மிளகாய் – 4

கேரட், பட்டாணி – தேவையான அளவு

கொத்தமல்லி

பெருங்காயத்தூள் – சிறிது

நெய் – 5 தேக்கரண்டி

செய்முறை

முதலில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி தானியங்களை ஒன்றிரண்டாக இடித்து அதனை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். அதன் பிறகு பயத்தம் பருப்பு, உளுந்தம்பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

அதன் பிறகு நீரை சுத்தமாக வடித்து அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். கேரட்டை நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

இப்பொழுது ஒரு அகலமாக பாத்திரத்தில் அரைத்து வைத்த கலவை, கேரட் கொத்தமல்லி, இடித்து ஊறவைத்த தானியங்கள் போன்றவற்றை கலந்து மாவு பதத்திற்கு செய்து கொள்ளவும். இப்பொழுது இந்த மாவை இட்லி பாத்திரத்தில் இலையை வைத்து அதில் இந்த மாவை சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவையான திணை காய்கறி இட்லி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here