கொரோனாவால் 1,15,000 சுகாதார பணியாளர்கள் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!!

0

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பல சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு:

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் என்னும் கொடிய வகை நோய் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வைரஸ் அனைத்து உலக நாடுகளிலும் பல வகையாக உருமாறி மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகளில் பல கோடி மக்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏற்படும் உயிரிழப்பின் விகிதம் அதிகரித்து வருகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் மட்டுமின்றி பல சுகாதார பணியாளர்களும் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி உலக சுகாதாரத்துறை இயக்குனர் டெட்ரோஸ் கூறியதாவது, இந்தியாவில் சுமார் 18 மாதங்களாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஆதிக்கத்தை குறைக்கும் கொரோனா வைரஸ் – பல மாதங்களுக்கு பின்பு 2 லட்சத்திற்கும் குறைவான பாதிப்பு!!

இதனால் தொடக்க காலத்தில் இருந்து தற்போது வரை குறைந்தது சுமார் 1,15,000 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த செய்தி அனைவரையும் அதிர வைத்தது. தொடர்ந்து பேசிய அவர், சுகாதார பணியாளர்களின் வாழ்க்கை, இறப்பிற்கும் வாழ்க்கைக்கும் இடையே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது உலகம் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here