Monday, June 21, 2021

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு…! கடந்த 24 மணி நேர நிலவரம் இதோ!!!

Must Read

மத்திய சுகாதார அமைச்சகம், இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கை விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 1,52,734 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்த கடந்த சில வார புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தால், இந்தியா பல விஷயங்களில் முன்னேறி உள்ளது. நோய் தொற்று பரவும் விகிதமும், தீவிரமான பாதிப்பு நிலையும் பல மாநிலங்களில் குறைந்துவிட்டது. தினசரி வெளிவரும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக 2 லட்சத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.இதற்கு முன்பு தினசரி பரவல் 4 லட்சத்தைத் தாண்டிச் சென்றது.

 

தற்போது கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,52,734 உள்ளது. இறப்பு எண்ணிக்கை 3,128 ஆக பதிவாகியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் மொத்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,80,47,534 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,56,92,342. பலி எண்ணிக்கை 3,29,100 ஆக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவலின்படி, மே 30 ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தம் 34,48,66,883 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் பரிசோதிக்கப்பட்ட கொரோனா மாதிரிகள் எண்ணிக்கை 16,83,135 ஆக உள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கணவருடன் ரோட்டில் அநியாயம் செய்யும் வெண்பா – ட்ரெண்டாகும் ரீல்ஸ் அலப்பறைகள்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வரும் வெண்பா கவின் ரோடில் செய்யும் அட்டகாசங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சித்தி 2: சித்தி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -