இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை ..சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்!!!

0

நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 16-ந் தேதியில் இருந்து நடந்து வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரண்டாம் டோஸ் செலுத்தும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தினசரி தொற்று எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டியுள்ள நிலையிலும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாகவே நடந்து வருகின்றன.

நாட்டின் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால், மத்திய அரசின் மேல் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் 19 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி நாட்டில் மொத்தம் 21.60 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. அதில் சுகாதார ஊழியர்களுக்கு 1.67 கோடி டோஸ் தடுப்பூசிகளும், முன்களப்பணியாளர்களுக்கு 2.42 கோடி தடுப்பூசிகளும், 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு 15.48 கோடி தடுப்பூசிகளும், 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2.03 கோடி டோஸ் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here