‘இந்த வேகத்தில் சென்றால் தடுப்பூசி வழங்க 3 வருடம் ஆகும்’ – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

0
The doctor is injecting male patients.In the medical's hand have syringes.

இந்தியாவில் தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வரும் கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் இதுவரை 17.52 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றையும் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் இரண்டு டோஸாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் தகுதியுடையவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்த வருகின்றனர். தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை அதிர்ச்சியான தகவல் ஒன்றை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மருத்துவ அவசர நிலை குறித்து எங்களால் முடிவு எடுக்க முடியாது – மதுரை கிளை அதிர்ச்சி!!

அதன்படி இதுவரை 17,52,35,991 கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 24.46லட்ச பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போதைய வேகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தால் 70% பேருக்கு தடுப்பூசிகள் வழங்க இன்னும் மூன்றரை வருடங்கள் ஆகும் என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here