தமிழகத்தில் இந்த ரேஷன் கார்டு ரத்தா? அரசின் இழுபறியால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

0
தமிழகத்தில் இந்த ரேஷன் கார்டு ரத்தா? அரசின் இழுபறியால் குழப்பத்தில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் இந்த ரேஷன் கார்டு ரத்தா? அரசின் இழுபறியால் குழப்பத்தில் பொதுமக்கள்!!

தமிழகத்தில் நியாய விலை கடைகளில் சலுகை விலையில் உணவு பொருட்களை பெற்று வரும் நுகர்வோர்களுக்கு இளஞ்சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட 5 நிறங்களில் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இதில் ஏழை, எளிய ஆதரவற்றோருக்கு PHH குடும்ப அட்டை வழங்கப்படுவது தனிச்சிறப்பு. இதன்மூலம் நுகர்வோர்கள் கூடுதலாக 8 கி அரிசி மற்றும் சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்படவில்லை. இதனால் பெரும்பாலானோர் NPHH கார்டுகளுக்கு விண்ணப்பித்து, இந்த ரேஷன் கார்டை வாங்கிய பிறகு PHH அட்டைக்கு விண்ணப்பிக்க வலியுறுத்த படுகிறார்கள். ஆனால் இப்படி விண்ணப்பித்த விண்ணப்பங்கள் ஓராண்டுக்கும் மேலாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது என நுகர்வோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

கல்லூரி மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதமாக உயர்வு.,அரசின் சூப்பர் அறிவிப்பு வெளியீடு!!

மேலும் இதுகுறித்த நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உணவு வழங்கல் அலுவலர் என மாறி மாறி பொதுமக்கள் அலைந்து வந்தாலும் முறையான தகவல்களை இதுவரை அதிகாரிகள் வழங்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம் செயல்படுத்த உள்ளது. தற்போது, இந்த PHH ரேஷன் கார்டின் நிரந்தர தடைக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என சம்பந்தப்பட்ட பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here