ரூ.5000 கொரோனா நிவாரண நிதியுதவி… மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!!

0

ஹரியானாவில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலார்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாக ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் அறிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று, உலகளவில் மட்டுமல்ல இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கோவிட் தொற்றின் முதல் அலையை விட இரண்டாம் அலையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாநில அரசும் மக்களுக்கு உதவ தேவையான நலத்திட்ட உதவிகளை செய்துவருகின்றன.

தற்போது ஹரியானா மாநில அரசு இது போன்ற ஒரு உத்தரவை அறிவித்துள்ளது. அதாவது அம்மாநிலத்தில் சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலார்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா நிவாரண நிதி உதவி வழங்க இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் 18-50 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினரை இழந்த வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் அம்மாநில அரசு ஆஷா தொழிலாளர்கள் மற்றும் தேசிய சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவியை அறிவித்து உள்ளது. இதனுடன் மின்சார கட்டணத்தை குறைத்தல் உள்ளிட்ட பல சலுகைகளையும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் நேற்று அறிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here