தோனி சாயலில் இந்திய அணியில் ஆட்டம் காட்டும் ஹர்திக் பாண்டியா., இதை முடிச்சா எதிர்கால கேப்டன் நீங்க தான்?

0
தோனி சாயலில் இந்திய அணியில் ஆட்டம் காட்டும் ஹர்திக் பாண்டியா., இதை முடிச்சா எதிர்கால கேப்டன் நீங்க தான்?
தோனி சாயலில் இந்திய அணியில் ஆட்டம் காட்டும் ஹர்திக் பாண்டியா., இதை முடிச்சா எதிர்கால கேப்டன் நீங்க தான்?

இனி வரும் காலங்களில் இந்திய அணிக்கான T20 தொடர்களில் ஹர்திக் பாண்டியா தான் நிரந்தர கேப்டனாக இருப்பாரா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் உலா வருகிறது.

ஹர்திக் பாண்டியா

இந்திய அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அதே அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளனர். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நிரந்தர கேப்டனாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ஹர்திக் பாண்டியா இப்போது இந்திய அணியில் ஒரு சிறந்த நட்சத்திர ஆல்ரவுண்டராக ஜொலித்து வருகிறார். இது தவிர இவர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கும் அனைத்து தொடர்களையும் வென்று கொடுத்து அசத்தி வருகிறார். எனவே, இவரை இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக BCCI அறிவிக்க வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் தரப்பினர்களும் தெரிவித்து வருகின்றனர்.

உயிருக்கு போராடும் நிலையில் சந்தியா.., சிவகாமி முடிவால் ஷாக்கான IPS ஆபீசர்.., சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!!!

இந்நிலையில் இவர் தனது கேப்டன்சியில் இதே மாதிரி தொடர்ந்து வெற்றிகளை கைப்பற்றி தந்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் இவர் தான் கேப்டனாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தோனியை போலவே இவரும் இந்திய அணியை வழிநடத்துகிறார் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்பாரா?? மாட்டாரா?? என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here