மாநிலத்தில் இந்தத்த மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் – அரசு திடீர் அறிவிப்பு!!

0
தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்??முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!
தமிழகம் முழுவதும் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்??முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

ஹரியானா மாநிலத்தில் ஏற்கனவே அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை 22 மாவட்டங்களில், வருகிற ஜனவரி 28ம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கூடுதல் கட்டுப்பாடுகள் :

ஹரியானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று  மிகவும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் நேற்று புதிதாக 8,388 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஜனவரி 5ஆம் தேதி முதல், வைரஸ் பரவல் அதிகரித்து காணப்பட்ட குரூப் A மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில், தொற்று பரவல் மற்ற மாவட்டங்களுக்கும் பரவியதால், கர்னால், பானிபட், ரோஹ்தக், ஜஜ்ஜார், குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்குலா உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஹரியானா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  ஜனவரி 5,10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுபோல, பல்வேறு கூடுதல், தளர்வுகளையும் வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில்  ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் 50% வாடிக்கையாளருடன் இயங்கும் எனவும், மதுபான விற்பனைக்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் எனவும், அத்தியாவசிய பொருட்களின் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் பலசரக்கு கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் எனவும்,  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here