ஹேண்ட்சம் பாய் ஹரிஷ் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்…! இன்ப அதிர்ச்சி அளித்த ஓ மணப்பெண்ணே படக்குழு!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் நேற்று தனது 31 வது  பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இந்த கொண்டாட்டத்தின் போது அவருக்கு  ஓ மணப்பெண்ணே படக்குழுவினர் திடீரென கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்து உள்ளனர்.

அனைவருக்கும் தனது திறமையை நிரூபிக்க ஒரு மேடை தேவை அந்த வகையில் ஹரிஷ் கல்யாணுக்கு அமைந்த மேடை தான் பிக் பாஸ் சீசன் 1. அதில் 53 வது நாள் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர். அதன் பின் இறுதிவரை பயணத்தை தொடர்ந்தார். இதற்கு முன்பு சில படங்களில் நடித்து இருந்தாலும் கூட அவர் அந்த அளவிற்கு பரிச்சியம் ஆகவில்லை. இந்த நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால்  பியார் பிரேமா காதல் படம் இவரின் திரை வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இதையடுத்து பல இளம் ரசிகர்களின் மனதில்  ஒரு சாக்லேட் பாய்யாகவும், காதல் மன்னாகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் இந்த  ஹேண்ட்சம் பாய்யின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி அவரை வாழ்த்து  மழையில் நனைய வைத்து உள்ளனர். மேலும் அவரின்  பிறந்தநாளுக்கு  தற்போதைய படமான ஓ மணப்பெண்ணே படக்குழுவினர் திடீரென என்ட்ரி கொடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் அளித்து உள்ளனர்.  இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக   பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here