மீண்டும் இசை வேட்டையில் களம் இறங்கிய ஹரிஸ் ஜெயராஜ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த ஹரிஸ் ஜெயராஜ் மீண்டும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மீண்டும் களம் இறங்கிய ஹரிஸ்

ஹாரிஸ் ஜெயராஜ் பல தமிழ் திரைப்படங்களுக்கு பின்னனி இசை பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் படு ஹிட் ஆனது. இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார். காக்க காக்க, கஜினி, வேட்டையாடு விளையாடு, நண்பன், துப்பாக்கி, வாரணம் ஆயிரம், ஐயன் மற்றும் பல திரைப்படங்களில் இவர் இசையமைத்துள்ளார். இவரது திரைப்பட பாடல்கள் அனைத்தும் இன்றும் படு ட்ரெண்டாக உள்ளது.

ஆனால் சில காலங்களாக ஹாரிஸ் ஜெயராஜ் இசைத்துறையில் இருந்து விலகினார். தற்போது இவர் துருவ நட்சத்திரம் மற்றும் லெஜண்ட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது ரசிகர் ஒருவர் நீங்கள் தெலுங்கு சினிமாவில் கால் பதித்து 10ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மீண்டும் எப்போது தெலுங்கு திரைப்படத்திற்கு இசையமைக்க போகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தற்போது நடிகர் நிதின் நடிக்கும் தெலுங்கு திரைப்படம் ஒன்றிற்கு இசையமைத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here