ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மிக விறுவிறுப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு, சர்வதேச இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 யுத்தத்திற்கு தயாராக உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது, இத்தொடருக்கான இந்திய அணியை விரைவில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அந்த அறிவிக்கப்படும் அணியில் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா இடம்பெற மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால் காயம் காரணமாக ஹர்திக் இன்னும் 2 மாதங்களுக்கு ஓய்வில் இருப்பார் என தெரிகிறது. விரைவில் இதை பிசிசிஐ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.