ஓர் அணிக்கு எதிராக இவ்வளவு சராசரியா?? ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஹர்திக் பாண்டியா!!

0
ஓர் அணிக்கு எதிராக இவ்வளவு சராசரியா?? ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஹர்திக் பாண்டியா!!
ஓர் அணிக்கு எதிராக இவ்வளவு சராசரியா?? ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஹர்திக் பாண்டியா!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராக தனது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தலான சராசரியை வைத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது ஒருநாள் போட்டியை சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், டிராவிஸ் ஹெட் (33), மிட்செல் மார்ஷ் (47) முதல் விக்கெட்டுக்கே 68 ரன்களை குவித்து இருந்தது. இந்த ஜோடியை ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து விக்கெட்டை கைப்பற்றி பிரித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களை தொடர்ந்து, வந்த ஸ்டீவ் ஸ்மித்தையும் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி அசத்தினார். இதன் மூலம், ஹர்திக் பாண்டியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மட்டும், பேட்டிங்கில் 56 சராசரியுடன் 112.95 ஸ்ட்ரைக் ரேட்டையும் வைத்துள்ளார். இதே போல, பவுலிங்கிலும், 11 விக்கெட்கள் உட்பட 31.09 சராசரியை தக்கவைத்துள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆல் ரவுண்டராக தனது சிறந்த பங்களிப்பை எடுத்துள்ளார்.

3வது திருமணத்திற்கு பிறகு வனிதா வீட்டில் நடந்த விசேஷம்.., அவரே வெளியிட்ட Function கிளிக்ஸ்!!

இந்த போட்டி மூலம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ்ஷும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, தொடர்ந்து 3 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களுக்கான பட்டியலில், மிட்செல் மார்ஷ் 12 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, இஷான் கிஷன் 11 மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கைல் மேயர்ஸ் 9 சிக்ஸர்களுடன் அடுத்த இரு இடங்களை பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here