வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,இனி மெசேஜை நீக்க தேவையில்லை., விரைவில் புதிய அப்டேட்!!

0
வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,இனி மெசேஜை நீக்க தேவையில்லை., விரைவில் புதிய அப்டேட்!!

வாட்ஸ் ஆப் பயனர்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிய அப்டேட்:

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப், அண்மையில் புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாட்ஸ் ஆப் ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு சூப்பரான புதிய அம்சம் குறித்த தகவலை வாட்ஸ் ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, தற்போது வரை வாட்ஸ் ஆப் செயலியில், பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய “sms” களை “edit ” செய்யும் option இல்லை. அதற்கு மாறாக அந்த sms யை நீக்க வேண்டிய நிலை தான் உள்ளது. இந்நிலையில் edit செய்யும் புதிய வசதி விரைவில் வர உள்ளன. அதாவது நீண்ட வாக்கியங்களில் sms அனுப்பும் போது, சின்ன பிழை வந்தாலும் மொத்த sms யையும் நீக்க செய்வது பயனர்களுக்கு சிரமமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பயனர்கள் வசதிக்காகவும், சிரமத்தை போக்கும் வகையிலும் பயனர்கள் தாங்கள் அனுப்பும் sms களை எடிட் செய்யும் வசதியை உருவாக்கும் பணியில் தீவிரமாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய அப்டேட் அமலுக்கு வந்த பிறகு பயனர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் ஐ update செய்து அதை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here