“Remembering The Legend” – பிறந்த நாளுக்கு நடிகை போட்ட பதிவு !!!

0

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்படும் மனோரமா பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

டெல்லிக்கு ராஜானாலும் பாட்டி சொல்லை தட்டாதே:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1937ஆண்டு மே 26ஆம் தேதி மனோரமா பிறந்தார். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. மன்னார்குடியில் இருந்து இவரது குடும்பம்; காரைக்குடியை அடுத்த பள்ளத்துருக்கு குடி பெயர்ந்தது. இந்தியத் திரைப்படத்துறையில் மாபெரும் சாதனைப் படைத்த இவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என பல நடிகருடன் நடித்தவர்.

தமிழ் சினிமாவில் அவருடைய சாதனை மிகவும் வியப்புக்குரியது. அவர் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல், கலைத் துறைக்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

திரைப்படத்துறை வரலாற்றில் மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’ மனோரமாவின் பிறந்தநாளில் அவரை போற்றி புகழ்வோம். இவர் இம்மண்ணுலகில் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது அவரது பிறந்த நாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்; “Remembering The Legend” என்று பதிவிட்டுள்ளர்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here