Tuesday, April 23, 2024

துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Must Read

தனக்கென தனி அடையாளத்தை பிடித்த, மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சி அளிக்கிறது.

கர்வமில்லா நடிகன்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான், 2012 ஆம் ஆண்டு ‘செக்கண்டு சோவ்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம், திரையுலகில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து ‘தீவிரம்’, ‘பட்டம் போலே’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்களில் நடித்தார். மலையாள சூப்பர் ஸ்டாரின் மகன் என்னும் கர்வம் இவரிடதில் ஒரு போதும் இருந்ததில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தனித்துவத்தின் அடையாளம்

இவரது முதல் படமான செக்கண்டு சோவ்விற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். மேலும் அவர் நடித்த சார்லி படத்துக்காக சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பலவிருதுகளை தனது தனித்திறனால் பெற்றுள்ளார். இவர் நடிகர் மட்டுமில்லாமல், பாடகர் என்றும் கூறலாம். மேலும் சமூக சேவைகளில் ஈடுபட்டதனால், இவரை மக்கள் சேவகன் என்றும் கூறலாம். மேலும், பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக குறும்படம் நடித்து இவரது சமூகநல குணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இத கேளுங்க ⇛⇛⇛ டெய்லரின் – “Folklore”

அகங்காரம் அற்ற மனிதர்

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. அப்படத்தில் நடித்துள்ள நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானது.

இதனால் இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் ‘வரனே அவஷ்யமுண்டு’ படக்குழுவினரைக் கடுமையாக விமர்சித்தனர். மேலும், துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சிறிதும் அகங்காரம் இல்லாத துல்கர் சல்மான் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டது பாராட்டத்தக்கது.

இவ்வாறு ரசிகர்களின் மனதில் அழகான ஹீரோவாக இடம்பிடித்த நம்ம துல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -