ஹேப்பி பர்த்டே கூகுள் – 23வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட நிறுவனம்!!

0

தனது 23 வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் நிறுவனம், அதனை சிறப்பிக்கும் வகையில் வித்தியாசமான டூடுலை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சினிமா நடிகை மாதிரி இல்லனாலும் சீரியல் நடிகை மாதிரி இருக்க.., பார்வதியிடம் கடலை போடும் பாஸ்கர்!!

வித்தியாசமான டூடுல்:

உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய சேமிப்பு களஞ்சியமாக கூகுள் என்ற தேடல் அமைப்பு உள்ளது.  ஒருவர் தேடும் எந்த கருத்துக்களையும் நொடி பொழுதில் வழங்குவதை தனது வாடிக்கையாக கொண்டு இந்த நிறுவனம் செயல்படுகிறது.  இந்த சூட்சுமமே இதன் வெற்றியின் ரகசியமாய் இருப்பதாக அதன் பயனர்கள் கருதுகின்றனர்.

இத்தகு சிறப்புகளை உள்ளடக்கிய கூகுள் நிறுவனம், தன்னுடைய 23வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக, தன்னுடைய முதல் பக்கத்தில் காண்போரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய டூடுல் ஒன்றை வடிவமைத்துள்ளது. தற்போது, நெட்டிசன்கள் அனைவரும் இந்த டூடுல் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் அள்ளி தெளித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here