காலை வானுயர தூக்கி கடற்கரையில் யோகாசனம் செய்த குட்டி குஷ்பு… இணையத்தில் உலா வரும் புகைப்படம்!!!

0

தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ஒற்றை காலை தூக்கி யோகாசனம் செய்த படி உள்ளார்.

ஹிந்தி திரைத்துறை மூலம் சினிமாவுக்கு வந்தவர் ஹன்சிகா. அதாவது இவர் ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்நிலையில் இவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது தனுஷின் மாப்பிள்ளை படம். அந்த படத்திற்கு பிறகு தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்கள் தொடங்கி வளர்ந்து வரும் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து உள்ளார்.

நடிப்பது மட்டுமல்லாமல் பல சமூக சேவைகளை செய்து வருகிறார் ஹன்சிகா. அதாவது இவர் கிட்டத்தட்ட 25 குழந்தைகள் வரை தன்  சொந்த செலவில் படிக்க வைக்கிறார். மேலும் மார்பக கேன்சர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இவர், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 10 பெண்களின் மருத்துவ செலவை ஏற்று செய்து வருகிறார். இவ்வாறு இவர் பல சேவைகள் செய்து வந்தாலும் தன்னுடைய நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரை அவரின் ரசிகர்கள் சின்ன குஷ்பு என்றே அழைத்து வந்தனர். அதற்கு காரணம் இவரின் உடல் அமைப்பு நன்றாக கொழுகொழுவென்று குஷ்பூ போன்று இருக்கும். இந்நிலையில் பட வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையை கணிசமாக குறைத்து உள்ளார்.

இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. மேலும் இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு உடன் சேர்ந்து தன்னுடைய 50 வது படமான மஹா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறது. அதே போல் இவர் தற்போது மை நேம் ஐஸ் சுருதி,105 மினிட்ஸ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சமீப காலமாக மாலத்தீவில் தன்னுடைய பொழுதை கழித்து வரும் இவர் அவ்வப்போது அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் கடற்கரையில் ஒன்றை காலை தூக்கிய படி யோகாசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here