வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!

0
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!
வருங்கால கணவருடன் இருக்கும் ஹன்சிகா.., முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான, ஹன்சிகா சமீபத்தில் தன் திருமண தேதியை  அறிவித்திருந்த நிலையில், தன் வருங்கால கணவருடன் சேர்ந்து செய்த காரியம் போட்டோவுடன் வெளியாகியுள்ளது.

போட்டோ வெளியீடு:

தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தப் படங்களை தொடர்ந்து புலி, சிங்கம் 2, பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் சமீப காலமாக திருமணத்திற்கு தயாராகி வந்ததாக சொல்லப்பட்டது. அந்த வகையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் சோகேல் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இது போக, டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் அரண்மனையில் தங்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அறிவித்தார். தற்போது திருமணத்தை அறிவித்த கையோடு, தனது காதலனுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அங்கு இருவரும் சேர்ந்து செய்த ரொமான்ஸ் மற்றும் சோகேல் ஹன்சிகாவிற்கு ப்ரபோஸ் செய்யும் போட்டோ ஆகியவற்றை ஹன்சிகா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இது போக பலரும் நடிகை ஹன்சிகா மற்றும் அவரது வருங்கால கணவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here