ஹன்சிகாவின் ‘MAN’ திரைப்படம்…., ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,

0
ஹன்சிகாவின் 'MAN' திரைப்படம்...., ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,
ஹன்சிகாவின் 'MAN' திரைப்படம்...., ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,

நடிகை ஹன்சிகா நடிக்கும் 51 ஆவது திரைப்படத்திற்கு ‘MAN’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தமிழில் நடிகர் விஜய், ஜெயம்ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை ஹன்சிகா சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

திருமணத்திற்கு பிறகு முழு வீச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை ஹன்சிகா தற்போது தமிழில் தயாராகும் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘MAN’ என பெயரிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிக்கு டாஸ் போடும் பிரதமர் மோடி….,ரசிகர்கள் உற்சாகம்…..,

அந்த வகையில் நடிகை ஹன்சிகா நடிக்கும் 51 ஆவது திரைப்படத்தை இகோர் என்பவர் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், ஹன்சிகாவின் புதிய திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு முகமூடி உண்டு’ என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here