முடி உதிர்வு பிரச்சனையா?? – இதோ உங்களுக்கான அருமையான டிப்ஸ்!!

0

இன்று பரவலாக அனைவருக்கும் இருக்கும் பிரச்னை என்றால் அது முடி உதிர்தல் பிரச்னை தான். இதற்கு பல மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஷாம்புக்களை நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து நாம் எண்ணெய் தயாரித்து நமது கூந்தலை பராம்பரிக்கலாம். அது குறித்த டிப்ஸ் பற்றி இந்த பதிவில் காணலாம்..!!

முடி உதிர்தல் பிரச்னை

இன்றைய அன்றாட சூழலில் முடி உதிர்தல் பிரச்சனை என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்து வருகின்றது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிகளவு மனஉளைச்சல், உடல் சூடு, தண்ணீர் ஒத்துக்கொள்ளலாம் இருத்தல், நாம் இருக்கும் இடத்தின் சூழல் என்று பல காரணங்கள் உள்ளது. குறிப்பிட்ட காரணத்தை யாரெல்லாம் கூற இயலாது.

தனுஷ், விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இதன் காரணமாக பலர் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். அது தான் தவறு. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நமது முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து எளிமையான எண்ணெய் தயாரித்து அதனை வாரத்தில் 4 முறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து மீளலாம்.

எண்ணெய் தயாரிக்க தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
  • வெந்தயம் – 2 டீஸ்பூன்
  • நெல்லிக்காய் – 2 (சிறிய அளவில்)
  • மிளகு – 5
  • வெங்காயம் – 6
  • கருவேப்பிலை – ஒரு கை அளவு

செய்முறை

மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு கடையில் போட்டு நன்றாக வதக்கவும். இந்த கலவையினை நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் இதனை தனியாக எடுத்து ஆற வைத்து விட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து விடவும். இந்த எண்ணெயினை தொடர்ந்து 6 மாதங்கள் கூட பயன்படுத்தலாம்.

பயன்கள்

இந்த எண்ணெய் பயன்படுத்துவதன் மூலமாக பல நன்மைகள் உள்ளன. இதில் நாம் நெல்லிக்காய் பயன்படுத்துவதால் முடி நன்றாக அடர்த்தியாக வளர அது உதவும். அதே போல் வெந்தயம் உடலில் உள்ள சூட்டினை தணித்து முடி வளர உதவுகிறது. வெங்காயம் பயன்படுத்தியுள்ளதால் பொடுகு, பேன் போன்ற தொல்லைகள் வாராது. வெங்காயத்தினை கொதிக்க விட்டுவிடுவதால் சைனஸ் உள்ளவர்கள் கூட இந்த எண்ணெயினை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here