தலைமுடி உதிவால் அவமானத்திற்கு ஆளான இளைஞர்.., தற்கொலை செய்துகொண்ட அவலம்.., டாக்டரை வளைத்த போலீசார்!

0
தலைமுடி உதிவால் அவமானத்திற்கு ஆளான இளைஞர்.., தற்கொலை செய்துகொண்ட அவலம்.., டாக்டரை வளைத்த போலீசார்!
தலைமுடி உதிவால் அவமானத்திற்கு ஆளான இளைஞர்.., தற்கொலை செய்துகொண்ட அவலம்.., டாக்டரை வளைத்த போலீசார்!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், முடி உதிர்வதற்கான மருந்துகளை சாப்பிட்டும் பலன் இல்லாததால் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலை செய்துள்ளார்.

தலைமுடி உதிர்வு:

முடி உதிர்வு பிரச்சனைகளை பெண்களை போன்றே ஆண்களுக்கும் எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த முடி உதிர்வு நாளடைவில் வழுக்கையாக கூட மாற வாய்ப்பு உள்ளது. அதனால் பெரும்பாலான ஆண்கள் இந்த பிரச்சனையில் இருந்து விடுபட மருத்துவரை அணுகி சிகிச்சையும் பெற்று வருகின்றனர். அப்படி ஒருவர் முடி உதிர்வுக்கு கடந்த 8 வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தலைமுடி உதிர்வது நிற்காத நிலையில் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது கோழிக்கோட்டை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, அவர் சொன்ன மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். இருப்பினும் பிரசாந்துக்கு முடி உதிர்தல் குறையாமல் புருவத்தில் உள்ள முடிகள் உதிர தொடங்கியுள்ளது. இதனால் அவர் பெரும் மன வேதனைக்கு ஆளாகி சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துள்ளார்.

WFH வேலையை தேடுபவரா நீங்க.. ரொம்ப உஷாரா இருக்கணும்..அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்!!

அவர் எழுதியிருந்த கடிதத்தில், நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது என்னை பார்த்து எல்லோரும் கிண்டல் செய்கின்றனர். என் சாவுக்கு தலைமுடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை மையமாக வைத்து டாக்டர் ரபிக்கை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here