கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள் – இதோ உங்களுக்காக!!

0

இன்றைய தலைமுறையினர் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் இந்த தலைமுடி பிரச்சனைகள் தான் அதிகம். இதற்கு மாறி வரும் பழக்க வழக்கங்கள் தான் காரணமாக உள்ளது. இப்பொழுது இந்த முடி உதிர்வு பிரச்சனைகளை தடுக்க என்ன மாதிரியான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.

முடி உதிர்வு

அனைவருக்குமே நல்ல அடர்த்தியான, நீளமான, பட்டுப் போன்ற கூந்தல் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஆனால் அதை பெறுவது என்பது மிகவும் கடினமாகவே உள்ளது. நிறைய பேருக்கு இளநரை, வழுக்கை, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்கு.இதற்கு காரணம், போதிய ஊட்டச்சத்துக்கள் உடலில் இல்லாததும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், அதிகப்படியான மனஅழுத்தமும் தான் காரணம். இப்பொழுது இதற்கான தீர்வை


இத்தகைய பிரச்சனைகள் இருப்பதால், அழகில் குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக கூந்தல் மற்றும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமலிருக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் இந்த உலகில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது இல்லாமல் இல்லை.

closeup woman hand holding hair fall from hairbrush

அதிலும் கூந்தல் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அதில் புரோட்டீன் உணவுகள் முக்கியமானவை. எனவே அத்தகைய புரோட்டீன் உணவுகளை உண்டால், புரோட்டினால் உருவான கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக வளரும். மேலும் அந்த உணவுகளில் உள்ள மற்ற சத்துக்களான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஜிங்க் மற்றும் தேவையான ஃபேட்டி ஆசிட்களும் உடலுக்கு கிடைத்து, கூந்தல் வளர்ச்சியோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள்:

  • மீன்: கடல் உணவான மீனில் அதிகப்படியான ப்ரோடீன், வைட்டமின் மற்றும் ஒமேகா 3 கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. இதனால் தலைமுடி வறட்சியாகாமல், அதிக வளர்ச்சியும் அடையும்.
  • நட்ஸ்: பாதாம் மற்றும் வால்நட் ஆகிய இரண்டிலும் அதிக அளவிலான ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இதனால் முடியில் செல் வளர்ச்சி பாதிப்பு அடையாமல் பாதுகாக்கும் மற்றும் முடியின் இயற்கை கருமை நிறம் தோன்றி பட்டுப்போல் மின்னும்.
Natural-fruit-facial
Natural-fruit-facial
  • கடல் சிப்பி: கடல் சிப்பியில் அதிக அளவில் உள்ள ஜின்க் உள்ளதால் அது ஜின்க் குறைப்பாட்டினால் ஏற்படும் முடிஉதிர்வை உதிர்வை கட்டுப்படுத்தி கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
  • காய்கறிகள் & கீரை : வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ள மாம்பழம், பூசணிக்காய், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சாப்பிடுவதினால் தலையின் ஈரப்பதம் பாதுகாக்கப்பட்டு தலை வறட்சியடையாமல் இருக்க உதவுகிறது. தினமும் ஒரு கீரை வகையினை எடுத்துக் கொள்ளும் போது நமது தலை முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

  • சிக்கன்: சிக்கனில் அதிக அளவிலான புரோட்டின் சத்து மற்றும் ஜின்க் சத்து உள்ளது. இதனால் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையான புரோட்டின் சத்து கிடைப்பதினால் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடன் வளரும். பழங்கள்: வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பழங்களை சாப்பிடுவதினால் கூந்தலின் வளர்ச்சிக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட் கிடைத்து கூந்தல் வலுவோடு வளர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here