பொதுவாக இந்த கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக நம் தலை முடி வறட்சியாக காணப்படும். இதனால் அதிக முடி உதிர்வு பிரச்சனையை நாம் சந்திக்க கூடும். இவ்வாறு ஏற்படும் இந்த பாதிப்பில் இருந்தும் நம் தலைமுடியை பாதுகாத்து, முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்;
- பாசிப்பயிறு – 50 கிராம்
- முட்டை – 1
- தயிர் – 50 கிராம்
செய்முறை விளக்கம்;
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு 50 கிராம் பாசிப்பயிறை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து கொள்ளவும். மேலும் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் 50 கிராம் தயிர் மற்றும் 1 முட்டை சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.
SSC தேர்வர்களே., உங்களுக்காகவே பிரத்யேகமாக வெளியான முக்கிய அறிவிப்பு!!
இப்போது நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த ஹேர் பேக்கை நம் தலையில் அப்ளை செய்து கொள்ளவும். இதன் பிறகு ஒரு 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு யூஸ் செய்து நம் தலைமுடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவதன் மூலம், நம் ஹேர் growth வளர்ச்சி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.