விஜய்யை இயக்கும் எச். வினோத்?? பறிபோகும் அட்லியின் வாய்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

0

முன்னணி நடிகர் விஜய் தற்போது AGS என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் ‘GOAT’ படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் . இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி, அட்லி மற்றும் விஜய் மீண்டும் இணையும் திரைப்படம் எவ்வாறு அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் காணப்பட்டது.

ஆனால், நடிகர் விஜய்யின் 69 ஆவது திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்த தகவல் குறித்த உறுதியான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் எச் வினோத், தமிழ் மொழியில் ‘தீரன்’, ‘சதுரங்க வேட்டை’, ‘துணிவு’ ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here