கற்பழித்த IIT மாணவன் எங்கள் மாநிலத்தின் சொத்து – நீதிபதி அளித்த ஜாமினால் வெடித்த சர்ச்சை!!

0
gang raped
gang raped

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய IIT மாணவருக்கு திறமையானவர், அசாம் மாநிலத்தின் எதிர்கால சொத்து எனக்கூறி கவுகாத்தி நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க பட்டால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இருப்பினும் சமூகத்திற்கு பயந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பல பெண்கள் மூடி மறைத்து விடுகின்றனர்.

rape

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கவுகாத்தி மருத்துவமனைக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிக மோசமான நிலையில் ஒரு பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இவரின் இந்த நிலைக்கு காரணம் IIT யில் பி.டெக் படிக்கும் 21 வயது மாணவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.

court order
court order

போலீசார் அந்த மாணவன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவன் பின்னர் கவுகாத்தி நீதிமன்றமத்தில் ஜாமின் மனு அளித்துள்ளான். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த மாணவன் மிகவும் திறமையானவர், அசாம் மாநிலத்தின் எதிர்கால சொத்து என கூறி ஜாமின் வழங்கியுள்ளார். நீதிபதியின் இந்த தீர்ப்பிற்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here