திருமணம் நடந்து 8 வருடத்திற்கு பிறகு மனைவிக்கு நடந்த அநியாயம்.., பெண் என்பதை மறைத்து மணம் முடித்த சோகம்!

0

கணவன் பெண்ணாக இருந்ததை மனைவி கண்டுபிடித்த சம்பவம் குஜராத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் சம்பவம்:

ஒரு மனிதனுக்கு அடிப்படை வாழ்வில் பணம், வேலை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு திருமணமும் முக்கியம் தான். இந்த காலகட்டத்தில் அதிகமானோர் காதல் திருமணத்தையே செய்து கொள்கின்றனர். காதலித்து கல்யாணம் பண்ணவர்கள் சண்டை போட்டு விவாகரத்து வாங்கும் காலம் போய், தற்போது எந்த திருமணம் செய்தலும் இருவருக்குள் மோதல் ஏற்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வித்தியாசமான முறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு பெண் தனது கணவனை இழந்து, இரண்டாவது திருமணத்திற்கு திருமண தகவல் மையத்தில் மணமகனை தேடிக்கொண்டிருந்தார். அந்நேரத்தில் விராஜ் வர்தன் என்பவர் அறிமுகமாகி இருவரும் பழகி வந்தனர்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதனை தொடர்ந்து அவர்கள் 2014ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட பிறகு காஷ்மீருக்கு தேனிலவுக்கு சென்றனர். அவர் ஏதோ காரணம் கூறி தேனிலவை தட்டி கழித்த கணவன், உடலுறவு வேண்டாம் என்று கொஞ்சம் காலமாக தட்டிக்கழித்து கொண்டே வந்துள்ளார். ஒரு சமயத்தில் அந்த பெண் வற்புறுத்திய போது, தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதால் தன்னால் உடலுறவு வைத்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்று அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய கொல்கத்தா சென்றுள்ளார். ஆனால் அவர் நிஜத்தில் ஓரு பெண் ஆவார். ஆணாக மாறுவதற்கு அந்த பெண் பாலின அறுவை சிகிச்சைக்கும் மற்றும் ஆண் உறுப்பு பொருத்துவதற்கு அங்கு சென்றுள்ளார் . விராஜ் வர்தன் என்பவர் ஒரு பெண் என்பதை அறிந்த மனைவி கடும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். இதையடுத்து கோத்ரி போலீஸ் நிலையத்தில் என்னுடைய கணவர் இயற்கைக்கு எதிராக உடலுறவு செய்ய வற்புறுத்துகிறார், இதை வெளியே சொன்னால் உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்று மிரட்டுவதாகவும் போலீஸிடம் புகார் அளித்தார். இந்நிலையில் டெல்லியில் இருந்து குற்றவாளி வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக கோத்ரி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here