கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு – அனைத்து அலுவலகங்களும் ஜூன் 7 முதல் செயல்படும்!!!

0

குஜராத் கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தியது, அதன்படி அனைத்து அலுவலகங்களும் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு:

புதிய கோவிட் -19 வழக்குகள் வீழ்ச்சியடைந்த நிலையில், குஜராத் அரசு மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது மற்றும் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்பட அனுமதித்ததாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

அதன்படி “தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் ஜூன் 7 முதல் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்” என்று குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் கடைகள் திறந்த  அனுமதித்துள்ள நிலையில், இப்போது புதிய உத்தரவின் படி, மாநிலத்தின் 36 நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.

மேலும் தினமும் இரவு 10 மணி வரை உணவகங்களின் விநியோகம் செய்ய முடியும் என்றும் மாநில அரசு கூறியது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 4 முதல் ஜூன் 11 வரை நகரங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று குஜராத் சி.எம்.ஓ தெரிவித்திருந்தார். கடந்த 24 மணி நேரத்தில் 1,207 புதிய COVID-19 வழக்குகள் சேர்க்கப்பட்டதன் மூலம்,  இதுவரை  மொத்தம் 8,13,270 வழக்குகள் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here