நீங்க வண்டி வாங்குனா.. நாங்க ரூ.1.5 லட்சம் தறோம் – குஜராத் அரசின் அதிரடி அறிவிப்பு!!! 

0
குஜராத் அரசு, அம்மாநில மக்கள் மின்சார வாகனங்கள் வாங்கினால் 1.5 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஒரு அதிரடியான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான வளர்ச்சி அடைந்த நாடுகள் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் முழுவதுமாக மின்சார வாகனங்களுக்கு மாறும் திட்டத்தை அறிவித்திருக்கின்றன. குறிப்பாக 2025-இல் நார்வேயும், 2030-இல் ஜெர்மனியும், 2035-இல் பிரிட்டனும், 2040-இல் பிரான்ஸும் பெட்ரோல் – டீசல் வாகனங்களுக்கு விடை கொடுப்பதற்கான இலக்கை நிர்ணயித்து உள்ளன.
இதே போல இந்தியாவும் கூட 2030-க்குப் பிறகு பெட்ரோல் – டீசல் வாகனங்களின் விற்பனைக்குத் தடை விதிக்கும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது குஜராத் அரசு தங்கள் மாநில மக்கள் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களை ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை வழங்கம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
பேட்டரியில் இயங்கும் இருசக்கரவாகனங்களுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயும், கார்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கதொகை வழங்குவதற்காக 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான நிலையங்கள் அமைப்பதற்கு 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அம்மாநில மக்களிடம் இந்த மின்சார வாகனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here