குஜராத்தில் திடிரென்று தோன்றிய மர்ம தூண் – செல்பீ எடுக்க குவியும் மக்கள்!!

0

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள ஓர் பூங்காவில் திடிரென்று ஓர் மர்ம தூண் தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த தூண் எப்படி அங்கு வந்தது என்று எவராலும் கண்டறிய முடியவில்லை. தற்போது அந்த தூண் முன் நின்று மக்கள் ஆர்வத்துடன் செல்பீ எடுத்து வருகின்றனர்.

மர்ம தூண்:

உலகில் அதிர்ச்சியான விஷயங்கள் தோன்றி நாளுக்கு நாள் மக்களை அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் உலகில் பலவேறு இடங்களில் மோனோலித் எனப்படும் மர்ம தூண் தோன்றி அனைவரையும் ஆச்சர்ய அடைய செய்கிறது. உலகில் முதன்முறையாக மோனோலித் என்னும் மர்ம தூண் அமெரிக்காவில் உள்ள உடா பாலைவனத்தில் தோன்றியது.அதன்பின் அது திடிரென்று மறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு சில நாட்கள் கழித்து ரூமோனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, ஸ்விட்ஸர்லாண்ட், ஜெர்மனி மற்றும் போலந்து போன்ற உலக நாடுகளில் இந்த மர்ம தூண் திடிரென்று தோன்றுகிறது. இது எதனால் தோன்றுகிறது என்னும் விஷயம் இன்னும் மர்மமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் ஏற்கனவே 3 தூண்கள் தோன்றி இருந்த நிலையில், தற்போது 4வது தூணும் தோன்றியுள்ளது. ஆனால் அந்த தூண்கள் எப்படி மர்மமாகா தோன்றுகிறதோ அதே போல் மர்மமாகவே மறைந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் சுமார் 30 இடங்களில் இந்த மர்ம தூண்கள் தோன்றியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்தில் உள்ள பூங்காவில் இந்த மோனோலித் மர்ம தூண் தோன்றியுள்ளது. இந்த தூண் தால்தெஜ் பகுதியில் உள்ள சிம்பொனி என்னும் பூங்காவில் தோன்றியுள்ளது. மேலும் இதன் உயரம் சுமார் 6 அடி என்று கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை – நாடு முழுவதும் இன்று தொடக்கம்!!

அதுமட்டுமல்லாமல் ஒரு நாளில் எப்படி இவ்வளவு பெரிய தூண் இங்கு இடம் பெற்றுள்ளது என்று பலரும் குழம்பி வந்தனர். மேலும் அதன் சுற்று பகுதிகளில் அதற்காக குழி தொடப்பட்டதா என்று பார்த்தல் அதுவும் இல்லை. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த பூங்காவிற்கு மக்கள் படை எடுத்து சென்று செல்பீ எடுத்து வருகின்றனர்.

முடிவுக்கு வந்த மர்மம்:

தற்போது குஜராத்தில் தோன்றிய மர்ம தூண் எப்படி அங்கு வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ள்ளது. பூங்காவை விரிவாக்கம் செய்வதற்கும் மற்றும் பார்ப்பரிப்பு செய்வதற்கும் ஓர் தனியார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது. அந்த தனியார் நிறுவனம் தான் அந்த தூணை நிறுவியுள்ளது என்று அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பூங்காக்கள் மற்றும் தோட்ட உதவி இயக்குநர் திலிபாய் படேல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here