மாநில முதல்வரின் திடீர் ராஜினாமா – அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!

0

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்வர் ராஜினாமா:

கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வயது முதிர்வு காரணமாக வும், கட்சியின் தலைமை அறிவுறுத்தல் காரணமாகவும் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடாகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கட்சியின் மேலிடத்தால் நியமிக்கப்பட்டார். இவரது ராஜினாமாவுக்கு காரணம், வயது முதிர்வு மற்றும் கட்சியின் தலைமையில் மாற்றம் என்ற வலுவான காரணங்கள் வைக்கப்பட்டன.

மாநில முதல்வரின் திடீர் ராஜினாமா - அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!
மாநில முதல்வரின் திடீர் ராஜினாமா – அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!

இந்த நிலையில், தற்போது இதே போன்ற ஒரு பரபரப்பு சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. அதாவது, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். குஜராத் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவரது திடீர் ராஜினாமா மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாநில முதல்வரின் திடீர் ராஜினாமா - அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!
மாநில முதல்வரின் திடீர் ராஜினாமா – அதிர்ச்சியில் தொண்டர்கள்!!!

ராஜினாமாவுக்கு பிறகு அவர் பேசியதாவது, கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார். அது மட்டுமல்லாமல், குஜராத் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், கட்சியில் இனி தனக்கு எந்தப் பொறுப்பை வழங்கினாலும், அதைச் செய்ய தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here