அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்., ஜன.31,2023 க்குள் மீண்டும் அமல் – முதல்வர் உறுதி!!

0
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்., ஜன.31,2023 க்குள் மீண்டும் அமல் - முதல்வர் உறுதி!!
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்., ஜன.31,2023 க்குள் மீண்டும் அமல் - முதல்வர் உறுதி!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வருகிற ஜன.31, 2023 ஆம் ஆண்டுக்குள் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம் :

அரசு ஊழியர்களுக்கு, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பங்களிப்பு பென்ஷன் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இதனால் இதற்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது. அரசு ஊழியர்களின் உரிமையை இந்த புதிய பென்ஷன் திட்டம் தட்டி பறிப்பதாக, பல மாநில ஊழியர்கள் அதற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய ஊதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அறிக்கையை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.

அதாவது தங்கள் தலைமையிலான ஆட்சி குஜராத்தில் அமைந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும், இது பொய்யான வாக்குறுதி அல்ல என்றும் உறுதி அளித்தார். பஞ்சாபில் அமல்படுத்தியதைப் போலவே குஜராத்திலும் இதனை நாங்கள் அமல்படுத்துவோம் என்றும், நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here