
பொதுவாக ஆண் பெண் என இருவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். இதை சரிப்படுத்திக் கொள்ள பலர் கெமிக்கல் நிறைந்த எண்ணெய்களை வாங்கி தேய்த்து வருகின்றனர். அப்படி கடைகளில் விற்கும் ஹேர் ஆயில்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. மேலும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து ஹேர் பேக் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தேவையான பொருட்கள்;
- கொய்யா இலை – ஒரு கைப்பிடி
- வெந்தயம் – 3 டீஸ்பூன்
- முட்டை – 2
செய்முறை விளக்கம்;
இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு 3 டீஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். இதோடு ஒரு கைப்பிடி அளவுக்கு கொய்யா இலைகளை சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்போது இதில் 2 முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.
மேலும் ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன் நம் தலை முடியில் தேவையான அளவிற்கு எண்ணெய் தேய்த்து கொள்ளவும். இப்போது இந்த hair பேக்கை முடியில் அப்ளை செய்து ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு ஷாம்பு யூஸ் செய்து வாஷ் செய்து கொள்ளவும். இந்த ஹேர் டிப்ஸை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதால் நம் தலை முடி மிருதுவாகவும், வேர் கால்கள் உறுதியாகவும் வளர உதவியாக இருக்கும்.