போலி பில் மூலம் வணிகம்.,    அடுத்து இந்த கணக்கை முடக்குவது உறுதி.,  அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை!! 

0
இந்திய அரசால் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் தான் சரக்கு மற்றும் சேவை வரி. ஒரு பொருளை  நுகர்வோர்  வாங்கும் போது அவர்கள் மீது இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும். இவ்வாறு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் வரியை விற்பனையாளர்கள் அந்தந்த மாநில அரசுக்கு செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் சில நிறுவனங்கள் சட்டத்திற்கு மாறாக அரசுக்கு கணக்கு காட்டாத வகையில் போலியாக பில் பட்டியலை தயாரித்து,  அதன் மூலம் வணிகம் செய்து வருகின்றனர். இவ்வாறு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் வணிக நிறுவனங்கள்  செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி  இது குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் போலியாக பில் பட்டியல் தயாரித்து, அதன் மூலம் வணிகம் செய்வோரின் ஜிஎஸ்டி பதிவு  எண்ணை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர்களை கண்காணித்து ஜிஎஸ்டி பதிவு எண்ணை முடக்குவதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here