2021ல் வளரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா – மீண்டு வரும் பொருளாதாரம்!!

0

நோமுரா என்ற வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் தரகு நிறுவனம் 2021 ம் ஆண்டிற்க்கான வர்த்தக கணிப்புகளை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் கணிப்பின் படி 2021ல் ஆசியாவிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடுகளின் பாட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது.

நோமுரா நிறுவனத்தின் கணிப்பின் படி ஜூன் காலாண்டில் -23.9 சதவீதமாக இருந்து, மீண்டு வருகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தையின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நோமுரா நிறுவனத்தின் கணிப்பின் படி இந்திய பொருளாதாரம் 9.9 சதவீதம் உயர்ந்து ஆசியாவிலேயே இந்திய பங்கு சந்தை முதல் இடத்தில் இருக்கும் என்றும், ஆசியாவின் மிகப்பெரிய நாடான சீனா 9 சதவீதம் அளவிற்கு உயர்ந்து இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 7.5 சதவீதம் உயர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் என்று கணித்து உள்ளது.

நோமுரா நிறுவனத்தின் இந்திய பொருளாதார வல்லுநர் மற்றும் நிர்வாக இயக்குனர் சோனல் வர்மா இது குறித்து தெரிவிக்கையில் “2021ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் -1.2 சதவீத அளவில் தான் வளர்ச்சி அடையும், ஆனால் 2வது காலாண்டில் 32.4 சதவீதமும், 3வது காலாண்டில் 10.2 சதவீதமும், 4வது காலாண்டில் 4.6 சதவீதம் என 2021ஆம் ஆண்டின் 4 காலாண்டுகளில் சராசரியாக இந்திய ஜிடிபி 9.9 சதவீதம் வளர்ச்சி அடையும்” என்று கூறியுள்ளார்.

தாத்தா ஆனார் முகேஷ் அம்பானி – மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஆண் குழந்தை!!

2020ம் ஆண்டு -7.1 சதவீதமாக இருக்கும் இந்திய நாட்டின் பொருளாதாரம் 2021ம் ஆண்டில் 9.9 சதவீதமாக உயர்வதின் மூலம் 2021ம் ஆண்டு மிகவும் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வளர்ச்சியானது 2021 ம் ஆண்டின் 2ம் காலாண்டில் தான் அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இதன்படி, உலகின் மற்ற நாடுகளான ஆஸ்திரேலியா 3.8%, சீனா 9%, ஹாங்காங் 4.3%, இந்தோனேசியா 4.9%, பிலிப்பைன்ஸ் 4.6%, சிங்கப்பூர் 7.5%, தென் கொரியா 3.6%, தாய்லாந்து 3.2% என்ற அளவில் பங்கு சந்தை அதிகரிக்கும் என்றும், மேலும் 2022ல் இந்தியா 5% மட்டுமே வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here