“ஸ்ரேயாஸ் ஐயர் சரியான பயந்தாங்கொள்ளி”…, ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் டாக்!!

0
"ஸ்ரேயாஸ் ஐயர் சரியான பயந்தாங்கொள்ளி"..., ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் டாக்!!

இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானதை அடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இவரை சீண்டும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர்:

பார்டர் கவாஸ்கர் டிராபியின் 3 வது டெஸ்ட் போட்டி, நேற்று முதல் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஓர் அணிக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற, நடுகள வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இவர் வந்த வேகத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் பெரிய ஏமாற்றத்தை தந்தார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், ஒரு சதம், 5 அரைசதம் என 640 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் அரங்கில் ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் டக் அவுட் இதுவே ஆகும்.

பார்முக்கு திரும்பிய மான்செஸ்டர் யுனைடெட் அணி…, FA CUP-யில் காலிறுதிக்கு முன்னேற்றம்!!

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கிரேக் சேப்பல், ஸ்ரேயாஸ் ஐயர் சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்படுவார் என நான் கேள்வி பட்டுள்ளேன். ஆனால், இதுவரை நான் இவர் அப்படி விளையாடியதே பார்த்தது இல்லை என, நேற்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் டக் அவுட் ஆன பிறகு கூறியுள்ளார். மேலும், என்னை பொறுத்த வரையில் அவர், சுழற் பந்துக்கு அதிகம் பயப்பட கூடியவர் என்று கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here