பட்டா வைத்திருந்தாலும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது…, பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி அறிவிப்பு!!

0
பட்டா வைத்திருந்தாலும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது..., பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி அறிவிப்பு!!
பட்டா வைத்திருந்தாலும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது..., பசுமை தீர்ப்பாயத்தின் அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவை பொறுத்தவரையில், ஒருவர் தனக்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்றால் அந்த இடம் குறித்த அனைத்து விவரங்களும் சரியாக இருந்தால் மட்டுமே பட்டா வாங்க முடியும். ஆனால், கடலூர் மாவட்டம், பரமேஸ்வர நல்லூர் கிராமத்தில், கோவில் குளத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு ‘நத்தம் அரசு புறம்போக்கு’ என வகைப்படுத்தப்பட்ட, பட்டாவை கடந்த 2022 ஆம் ஆண்டில் வழங்கியுள்ளது. இவ்வாறு பட்டா வழங்கியதற்கு எதிராக, கடலூரை சேர்ந்த ஒருவர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு ஒன்றை செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், “கடந்த 2000 ஆம் ஆண்டில் தான் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா வழங்கப்பட்டது என்பது தவறு. அதிலும், கோவில் நிலத்தை புறம்போக்கு என நத்தம் அரசு மாற்றியத்ததும் தவறு. எந்த நோக்கத்திற்காகவும் நீர் நிலைகளை வகை மாற்றக் கூடாது என்பது உச்சநீதி மன்றத்தின் முக்கிய குறிக்கோள். இதை மாற்றியமைக்க கூடாது” என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், பட்டா வைத்திருந்தாலும், கோவில் இடத்தை ஆக்கிரமிக்க எவருக்கும் உரிமை இல்லை. எனவே, கோவில் இடத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு வேறு இடம் கொடுத்து சுமுகமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு மாவட்ட கலெக்டருக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வங்கி ஊழியர்களே., தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here