வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி., அடுத்த மாதமே சுங்கச்சாவடிகள் நீக்கப்படும்? மத்திய அமைச்சர் பரபரப்பு!!!

0
வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி., அடுத்த மாதமே சுங்கச்சாவடிகள் நீக்கப்படும்? மத்திய அமைச்சர் பரபரப்பு!!!

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடி மூலம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க கூடாது என்பதற்காக பாஸ்டேக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இருந்தாலும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணமே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு GPS மூலம் கட்டணம் வசூல் செய்யும் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க கட்டண வசூல் முறை, அடுத்த மாதமே அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம் சுங்க சாவடிகள் முழுமையாக நீக்கப்பட்டு, வாகனங்கள் செல்லும் தூரங்களை அதிநவீன கேமரா கொண்டு கணக்கிட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

விஜய் பட பாடலுக்கு பெல்லி டான்ஸ் போட்ட நடிகை கீர்த்தி செட்டி.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here